சிறுநீரக நோயாளிகளுக்கு பன் என்ற பரிசோதனை எதற்காக?
'பிளட் யூரியா நைட்ரஜன்' என்பதன் சுருக்கமே 'பன்' பரிசோதனை.
இதில் நைட்ரஜன் என்ற கழிவுப்பொருள் உடலில் எப்படி வெளியேறுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் பாதிப்பை தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர, கல்லீரல் செயல்பாட்டினையும் சேர்த்து இதில் தெரிந்து கொள்ளலாம்.
இதன் இயல்பு அளவு 10 லிருந்து 20 மி.கி./டெ.லி.வரை. இதற்கு மேல் அளவு அதிகரித்தால், சிறுநீரகப் பிரச்னை என்றும், அளவு குறைந்தால் கல்லீரலில் பிரச்னை என்றும் பொருள்.
சிறுநீரகப் பிரச்னைக்காக சிகிச்சையிலுள்ள நோயாளிகளுக்கு அந்த சிகிச்சை பலன் தருகிறதா என்பதையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
சிறுநீரகப் பிரச்னைக்கு நீர் வறட்சி, இதயச் செயலிழப்பு போன்ற வேறு காரணங்கள் இருக்கக்கூடுமா என்பதையும் இது தெரிவிக்கிறது.