சினிமாவில் மாஸ் ஹீரோக்களைக் கொண்டாடும் காலத்துக்கு வருகிறதா எண்ட் கார்டு?

காலங்காலமாக தென்னிந்தியாவில் கன்னட, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகங்களில் மாஸ் ஹீரோக்களுக்கு அதீத வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில், வெளியாகும் இவர்களது படங்கள் மிகப் பெரிய வணிக சந்தையை உருவாக்கியுள்ளன.

இதுதவிர தனியார் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமம், பிற மாநில டப்பிங் உரிமம் என கோடிக்கணக்கில் விற்பனை பெருகுகிறது.

கடந்தாண்டு அஜித்தின் கட்டவுட்டுக்குப் அபிஷேகம் செய்ய முற்பட்ட ரசிகர் ஒருவர் நூறு அடி உயரத்தில் இருந்து விழுந்து மரணம் அடைந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல, தென்னிந்தியாவில் மாஸ் ஹீரோக்கள் பெயரை பச்சை குத்திக்கொள்வது, படம் வெற்றி பெற மொட்டை போடுவது உள்ளிட்ட செயல்களில் நடப்பதுன்டு.

ஆனால், படிப்பறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது சினிமா ரசிகர்கள் பலர் இதுபோன்ற செயல்களை தவிர்த்து வருகின்றனர்.

இந்தி சினிமாவில், மாஸ் ஹீரோக்களுக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற மோகம் இருந்ததில்லை. அங்கு ஹீரோக்களுக்கு இணையாக சம்பளத்தையே ஹீரோயின்களும் பெறுவது குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஹீரோக்களின் காலம் இன்னும் சில ஆண்டுகளில் நிறைவடைந்துவிடும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது.

எனவே, அஜித்-விஜய் இருவருமே தமிழில் கடைசி மாஸ் ஹீரோக்களாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்படுகிறது.