உன்னால் எல்லாம் முடியும்... விவேகானந்தரின் வெற்றிக்கான வரிகள் !

'என்னால் எல்லாம் செய்ய முடியும்' என தீர்மானமாக நம்புங்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

எதையும் தெரியாது என சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு வீரனை போல செயல்படு.

எனக்கு எதுவும் தெரியாதே என்று எண்ணும் வரை மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.

உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய்.

எதற்காகவும் எள்ளளவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். அநீதியை எதிர்த்து துணிவுடன் போராடத் தயாராக இருங்கள்.

நீங்கள் விரும்பியதை செய்வது போல, பிறரும் அவர் விரும்புவதை செய்ய அனுமதியுங்கள்.

பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.

மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை.

கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெறுவான்.