மணிபிளாண்ட் பராமரிப்புக்கு சில டிப்ஸ்!!

தாவரங்களில் மணி பிளாண்ட்டை பராமரிப்பது மிகவும் எளிது. இதை வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியிலோ வளர்க்கலாம்.

இந்த கொடியின் சிறு தண்டை நீர் நிரப்பிய பாட்டிலில் வைத்து, வீட்டின் உள்ளே வைத்தாலும், எந்த ஒரு முறையான பராமரிப்பின்றியும் வளரும்.

மணி பிளாண்ட்டிற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதற்காக மண்ணில் புதைத்து வளர்க்கும் போது அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை ஊற்றக்கூடாது.

சூரிய வெளிச்சத்திற்கு நேராக வைத்தும் வளர்க்கலாம். ஏனெனில் இந்த கொடிக்கு சூரிய வெளிச்சம் என்றால் மிகவும் பிடிக்கும். மிகவும் நீளமாக வளரும்.

வீட்டிற்குள்ளே வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் போது, சிறிய தொட்டிகளை பயன்படுத்தலாம். பாட்டில்களிலும் வளர்க்கலாம்.

மணி பிளாண்ட் கொடி என்பதால், அது வளரும் போது படர்வதற்கு ஏற்றவாறு கயிற்றை கட்டிவிட்டு, அந்த கயிற்றில் சுற்றிவிட்டால், அது கொடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

அளவுக்கு அதிகமான அளவில் கிளைகள் அல்லது தண்டுகள் வந்தாலும், அதனை லேசாக வெட்டிவிட வேண்டும். இதுவும் கொடியின் வேகமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.