பார்க்க வேண்டிய கோவில்... கங்கை கொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் கோவில்
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் உள்ளது.
இங்குள்ள நந்தி, சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது; மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது.
தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு.
மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.
கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது.
கருவறை லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், கோடையில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தையும் தரும்.
இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.