நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க...!
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க,
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றிதேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றிநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றிசீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!