ரமலான் மாதத்தின் ருசியான பின்னணி!
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் துவங்கியுள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள உணவு உற்பத்தி ஆலைகள் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியுள்ளன.
ரமலான் நோன்பு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஈத்-உல்-பிதர் பண்டிகையில் முக்கிய இடம் வகிக்கும் 'சேமியா' தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரமலான் மாதத்தின் அதிகாலை உணவான 'சஹர்' மற்றும் நோன்பு துறக்கும் மாலை நேர உணவுகளில் சேமியா முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக, 'ஷீர் குருமா' என்ற இனிப்பு உணவின் ஆன்மாவே இந்த சேமியாதான். 'ஷீர்' என்றால் பாரசீக மொழியில் பால் என்றும், 'குருமா' என்றால் பேரீச்சம்பழம் என்றும் பொருள்.
உயர்தர மைதா மாவுடன், குறிப்பிட்ட அளவு தண்ணீர் சேர்த்து, கைகளால் நீண்ட நேரம் பிசையப்படுகிறது. ரப்பர் போன்ற நெகிழ்வுத்தன்மையைப் பெற்ற பின் மெல்லிய இழைகளாக மாற்றப்படுகிறது.
இயந்திரங்கள் வந்தாலும், பிரயாக்ராஜில் இப்போதும் பல இடங்களில் திறந்தவெளியில் மூங்கில் சட்டங்களில் சேமியாவைத் தொங்கவிட்டு இயற்கையான சூரிய ஒளியில் உலர்த்துகிறார்கள்.
இது சேமியாவுக்கு ஒரு தனித்துவமான மணத்தைக் கொடுக்கிறது.பெனி சேமியா இது நெய்யில் பொறிக்கப்பட்டு, வட்ட வடிவில் நூலிழை போல சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.
இதைச் சமைக்க வேண்டிய அவசியமில்லை; சூடான பாலில் போட்டாலே கரைந்து ருசி தரும்.கிவாமி சேமியா இது மிக மெல்லியதாக இருக்கும், உலர்ந்த இனிப்பு வகைகள் செய்யப்பயன்படுகிறது.