அதிதியின் அழகிய நவராத்திரி கலெக்ஷன்ஸ்.. வேற லெவல்...!
கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமானவர் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் 'கமிட்' ஆகியுள்ளார்.
முதல் படத்திலேயே சாதாரண கிராமத்துப் பெண் தோற்றத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார். அதிதி பாடிய, 'மதுரை வீரன் அழகுல' பாடலுக்கு, ரீல்ஸ் செய்யாதவர்களே இல்லை எனலாம்.
தற்போது நவராத்திரியை முன்னிட்டு புடவை, லெஹங்கா என அழகிய பாரம்பரிய உடைகளில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுகிறார்.
ஹாரம், நெக்லஸ், நெத்திச்சுட்டி என நகைகளும் பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டெம்பிள் கலெக்ஷன்ஸ், குந்தன் என அலங்கார நகைகள் கூடுதல் அழகை அளிக்கிறது.
அழகிய இளவரசி, மகாராணி போன்ற கெட்டப்புகளில் தினமும் ஒவ்வொரு உடைகளை அணிந்து, நவராத்திரிக்கு கலக்கலான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் அதிதி.
அதிதியின் அழகிய புகைப்படங்கள் லட்சக்கணக்கான 'லைக்'குகளை அள்ளிக் குவிக்கும் நிலையில், 'நீங்க வேற லெவல்' என ரசிகர்கள் 'கமென்ட்'டுகளை கூறி வைரலாக்கி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதிதியின் பேஷன் கலெக்ஷன் உடைகளை போன்று, டீனேஜ் பெண்கள் ரெடிமேடு கடைகளில் தேடி அலைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.