பூஜாவும் பேஷனும்!

கர்நாடகா மாநிலத்தின் உடுப்பியைப் பூர்வீகமாகக் கொண்ட துளு பேசும் கன்னட குடும்பத்தில் 1990, அக்.,13 அன்று பிறந்தவர் பூஜா ஹெக்டே.

சிறு வயதில் படிப்பு மட்டுமின்றி பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கிய அவர், பதின்பருவத்தில் நடன, பேஷன் விழாக்கள் பலவற்றில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் சென்றார்.

'மிஸ் இந்தியா' பட்டம் வெல்வதை தனது கனவாகக் கொண்டிருந்த பூஜா, 2009ல் 'மிஸ் இந்தியா டேலண்டட்' முதல்நிலை அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார்.

அதே ஆண்டில் நடந்த 'மிஸ் இந்தியா' போட்டியில் தோல்வி அடைந்தாலும், தளராமல் அடுத்தாண்டில் மீண்டும் போட்டியில் பங்கேற்று மிஸ் இந்தியா ரன்னர் அப்பில் இடம்பிடித்தார்.

அன்று துவங்கி பேஷன் இதழ்கள் பலவற்றின் அட்டைப்படத்தில் இடம் பெறத் துவங்கினார். அவரது ஃபிட்னஸ் ஒர்க் அவுட்கள், டயட் முறை, பேஷன் ஆடை தேர்வு உள்ளிட்டவை பலரையும் கவர்ந்தது.

முதல் படமான முகமூடி படு ஃபிளாப் ஆகி சினிமா வாழ்க்கை அஸ்தமனமாக இருந்த நிலையில், தெலுங்கு சினிமா அவரை படிப்படியாக உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

ஐந்து ஆண்டுகளிலேயே தெலுங்கு மெகா பட்ஜெட் சினிமாக்களின் தவிர்க்க முடியாத நாயகி ஆன பூஜா, தனது அதிவேக நடனம் மூலமாக தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

முதன்முதலில் பூஜாவின் சினிமா வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்திய தமிழ் சினிமாவே, 10 ஆண்டுகள் கழித்து விஜய்யின் பீஸ்ட் படம் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெறச் செய்தது.

பாலிவுட் சினிமாவில் உள்ள வாரிசுகள் ஆதிக்கத்தை உடைத்து எதிர்காலத்தில் அங்கும் தடம் பதிப்பேன் எனக் கூறிய தென்னிந்திய காதாநாயகிகளில் பூஜாவும் ஒருவர்.