அலட்டல் இல்லா அழகு பதுமை சாய் பல்லவி...!
நடிகை என்றாலே மாசு மருவில்லா வழுவழு முகம், உயர் ரக மேக்கப், கலரிங் செய்யப்பட்ட ஸ்ட்ரெயிட்டன்ட் ஹேர், ஆளை அசத்தும் நவநாகரிக உடை என்பதுதான் பலரது பார்வை.
எளிமையான லினன், காட்டன் புடவைகள், கண்களை உறுத்தாத நகைகள், ஆளை அசத்தும் சிரிப்பு என வலம் வரும் சாய்பல்லவி போன்ற நடிகைகளே இன்றைய இளசுகளின் பேவரைட்.
இவரது இன்ஸ்டாகிராம் படங்களுக்குக் கிடைக்கும் மில்லியன் கணக்கான லைக்ஸே இதற்கு சாட்சி.
மேக்கப் போடுவதை அதிகம் விரும்பாத இவர், அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என கொள்கை வைத்திருப்பதாக அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
கடந்த மே மாதம் சாய் பல்லவி தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய இன்ஸ்டா பதிவிலும் காட்டன் புடவையே அவரது சாய்ஸாயிருந்தது.
அழகுக்கும், மேக்கப்புக்கும் சம்பந்தமில்லை என பல நேரங்களில் நிரூபித்துக் கொண்டே இருக்கும் இவரைப் போன்றவர்கள், மேக்கப்பை விரும்பாத சிம்பிள் லுக்கில் இருக்க விரும்புபவர்களுக்கு நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷன்தான்...!