ஒரு லட்சம் முத்துக்களால் ஆன ஆடை : தேவதையாக ஆலியா பட்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'மெட் காலா 2023' என்ற பேஷன் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பாலிவுட் பிரபலங்கள் விதவிதமான ஆடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

நடிகை ப்ரியங்கா சோப்ரா கருப்பு நிற வாலண்டினோ உடையிலும், நிக் ஜோனாஸ் கருப்பு நிற கோட் சூட்டிலும் அசத்தலாக என்ட்ரி கொடுத்தனர்.

ப்ரியங்கா சோப்ரா அணிந்து வந்திருந்த ஆடையை விட, அவர் அணிந்திருந்த நெக்லஸ் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த இந்த நெக்லஸ், இந்திய மதிப்பில் 204 கோடி ரூபாயாம்.

மற்றொருபுறம் ஆலியா பட் இந்திய வடிவமைப்பாளர் பிரபால் குருங் வடிவமைத்த, ஆடையை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஒரு லட்சம் முத்துக்கள் பதித்த வெள்ளை நிற கவுனில் தேவதை போல் காட்சியளித்த ஆலியா பட்.