இன்று சாய்பாபா ஸித்தி தினம்! அவரின் பொன்மொழிகள் சில...
இழந்த பொன்னை திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் காலம் போனால் திரும்புவதில்லை.
பிறர் குறையை பெருந்தன்மையுடன் மறக்க, மன்னிக்க முயலுங்கள்.
முதலில் பெற்றோரை ஆதரித்து சேவை செய்யுங்கள். அதன் பின் ஊரிலுள்ள மற்றவர்களுக்கு சேவையாற்றலாம்.
பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.
செல்வத்தில் மனிதன் குறைந்திருக்கலாம். ஆனால், ஒழுக்கத்தில் உயர்ந்தவனாக இருப்பது மிக அவசியம்.
சேவை என்றதும் உடல் உழைப்பு சார்ந்தது மட்டுமல்ல. ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்துவதும் நல்ல சேவையே.
மக்களுக்கு சேவை செய்வதை விட பலன் தரும் பிரார்த்தனை வேறில்லை.