சைனஸ், அலர்ஜி இரண்டும் வெவ்வேறா ? 
        
மூக்கில் இரண்டு பிரச்னைகள் வரும். அலர்ஜி என்பது பல்வேறு காரணங்கள், மரபணு காரணங்களால் ரத்தத்தில் வருகிறது. டாக்டர்கள் தான் சைனஸ், அலர்ஜியை வேறுபடுத்தி கண்டுபிடிக்க முடியும். 
        
சைனஸ் பாதிப்பா அல்லது அலர்ஜியா என்பது தெரியாமல் சுயமாக சிகிச்சை செய்யக்கூடாது. 
        
சைனஸ்
 என்பது நாள்பட்ட நோய். மூக்கு அடைபட்டு சதை வீங்கி எலும்பு வளைந்து சளி 
முற்றி வரும். மூக்கு, தொண்டையில் சளி சேர சேர பழுத்து சைனஸில் முடிகிறது.
        
மூக்கிலுள்ள
 இரு துவாரங்களும் சரியாக இருந்தால் வெளியில் இருந்து வரும் கிருமிகள் 
தடுக்கப்பட்டு தொண்டைக்கு சுத்தமான காற்று செல்லும்.  
        
மூக்கில் தண்டு வளைந்திருந்தாலோ, சளியால் அடைத்திருந்தாலோ காற்றின் மூலம் வரும் கிருமிகள் அங்கு புகும். துாசியும் சேரும் போது நாளாக நாளாக அது கெட்டநீராக மாறி சளியாகி சைனஸ் ஆகிறது.
        
நம் உடலின் இதயத்திற்கு இணையான முக்கியமான பகுதி மூக்கு. 
சுவாசிக்கும் போது மோசமான, அசுத்தமான காற்றை மூக்கில் உள்ள நுண்ணிய பகுதி 
சுத்திகரித்து நுரையீரலுக்கு அனுப்புகிறது. 
        
இல்லாவிட்டால் நமது உடலில் கிருமிகள் நிறைந்துவிடும். மூக்கை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். 
        
மூக்கின்
 உள்ளே செல்லும் கிருமிகளை குறைக்கவும் தடுக்கவும் தான் முகக்கவசம் 
அணிகிறோம். எனவே வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவதே நல்லது.