பலாப்பழம் சாப்பிடும்போது இந்த விஷயங்களில் கவனம் தேவை
பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக, உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலி மற்றும் வாந்தியை உண்டாக்கும்.
இனிப்பு மற்றும் கலோரி அதிகமுள்ளதால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களும், பொட்டாசியம் அதிகமுள்ளதால் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பவர்களும் இதை சாப்பிடக்கூடாது.
குடல்வால் அலர்ஜி உள்ளவர்கள் பலாபழத்தை தவிர்க்க வேண்டும்.
பலா விதைகள் அதிகமாக சாப்பிடுவது மலச்சிக்கல், புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்று வலி போன்றவற்றை உண்டாக்கும்.
பலா பிஞ்சினை அதிகளவில் உண்பதால் செரிமான பிரச்னை, வயிற்றுவலி போன்றவை ஏற்படக்கூடும்.
சிலருக்கு பலாப்பழ வாசம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.