மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும் முன்.. அட இவ்வளவுதாங்க...!

நாகரிக உலகில் சானிட்டரி நாப்கின் பேட், டாம்பான், மென்ஸ்ட்ருவல் கப் என விதவிதமாக உள்ளன. ஆனால், மென்ஸ்டருவல் கப்பை பயன்படுத்துவது குறித்த தயக்கம், சந்தேகம் பலருக்கும் உள்ளது.

இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பது மட்டுமின்றி மாதவிடாய் இருப்பது போல் உணர முடியாது என்பது டாக்டர்களின் கருத்தாகும். மீடியம் மற்றும் லார்ஜ் என அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப உள்ளது.

பயன்படுத்தும் முன் கொதிக்கும் தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் கப்பை போட்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தவும். அதேபோல் கைகளையும் தண்ணீரில் கழுவவும்.

கைகளை சுத்தமாக கழுவிவிட்டு சுத்தம் செய்த கப்பை ஆங்கில எழுத்தான 'சி' வடிவத்தில் வளைத்து மடித்து வஜைனா வழியாக, கர்ப்பப்பை வாய் பகுதியின் உட்புறத்தில் செலுத்த வேண்டும்.

கப் உள்ளே சரியான நிலையில் இருந்தால், நாம் அசவுகரியமான நிலையை உணர மாட்டோம். சரிவர பொருந்தாவிட்டால் கசிவு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

அதேப்போல் 8 மணி நேரம் கழித்து வெளியில் எடுக்கும் போது கப்பின் கீழ் பகுதியிலுள்ள சிறிய கூம்பு பகுதியை பிடித்து இழுக்க முயற்சிப்பர். இது தவறானது முறை.

கப்பின் அடிப்பகுதியில் இரு விரல்களால் சிறிதளவு அழுத்தம் கொடுத்துதான் இழுக்க வேண்டும். அப்போதுதான், அதன் வாய் பகுதியை சிறியதாக மாற்றி, எளிதாக வெளியில் எடுக்க முடியும்.

பயன்படுத்திய கப்பை மீண்டும் சூடான தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து சுத்தம் செய்து, பத்திரப்படுத்தி வைக்கலாம். பல மாதம், ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.