மரங்களின் காதலி பெத் மூனின் அற்புத புகைப்படங்கள்!
அமெரிக்க புகைப்படக் கலைஞரான பெத் மூன், உலகின் மிகப் பழமையான மரங்களை படம் எடுப்பதற்காகவே தனது வாழ்நாளில் 14 ஆண்டுகளை செலவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'காதலர்கள்' என கேப்ஷனில் அழைத்துள்ளார். இது ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நாட்டில் உள்ள மரங்கள்.
இவரின் மர புகைப்படங்களில் இப்படம் மிக முக்கியத்துவமாக போற்றப்படுகிறது. 'டிராகன் பிளட்' என அழைக்கப்படும் இம்மரம், அரேபியாவில் உள்ள ஒரு சிறு தீவில் உள்ளது. குடை போன்ற வடிவத்தை கொண்டது.
மடகாஸ்கரில் உள்ள மெஜெஸ்டி மரம் 100 அடி வரை வளரக்கூடியது. இது 400 ஆண்டுக்கு மேல் பழமையானது.
100 அடி வரை வளரக்கூடிய இம்மரங்கள், மடகாஸ்கரில் உள்ள தீவில் மட்டுமே வளரும் மரங்களாகும். கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக உள்ளது. தற்போது இருக்கும் 20 மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக மழைக்காடுகளில் இருக்கும் கபோக் மரம், அமெரிக்காவின் புளோரிடாவில் தனியார் தோட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேர்கள் மட்டும் 12 அடிக்கு மேல் உள்ளது.
மடாகாஸ்கரில் டோலியாராவில் குறைவான பாதுகாப்பில் வளர்கிறது தி இஃபாட்டி டீபாட் மரம். உள்ளூர்வாசிகளால் இம்மரம் டீபாட் என செல்லமாக அழைக்கப்படுகிறது. 31,000 கலன்களில் சேமிக்கும் அளவு நீரை இதில் சேமிக்கலாம்.
கம்போடியாவில் சியம்ரீப் மாகாணத்தில் ஆங்கோர் பாதை அமைந்துள்ளது. இது பாதி சிதைந்த நிலையில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புத்த கோவிலின் கட்டடத்தை மூழ்கடிப்பது போன்று இருக்கிறது.
நமீபியா நாட்டில் சொகோட்ரா பகுதியில் ரோஜா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது பாட்டில் மரம். இம்மரத்தின் வேர்கள் தரையில் காணப்படாமல், நேரடியாகவே தண்டுகள் இருக்கின்றன.
கலிஃபோர்னியாவின் பிரிஸ்டில்கோன் பைன் காட்டில் பைன் ரெலிக் மரம் உள்ளது. வெண்மை நிறமான இம்மரம் புயலில் காற்று சுழல்வதைப் போன்று அமைந்திருக்கிறது.
60 அடி உயரம் வளரக்கூடிய இம்மரம், வேல்ஸ் நாட்டின் கர்மர்தின்ஷிரைன் பகுதியில் பரந்து வளர்ந்திருக்கிறது. இது 1863 காலகட்டத்தை சேர்ந்ததாக கூறப்படுகிறது.