பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பும் சிகிச்சை முறையும்...

பொன்னுக்கு வீங்கி பாதிப்பு வந்தால், கன்னப்பகுதிக்கு கீழே, கழுத்தின் ஒரு புறத்திலோ, இரு புறங்களிலும் வீக்கம் ஏற்படும்.

இந்நோய் ஓரிரு வாரங்களில் தானாகவே குணமாக கூடியதாக இருந்தாலும், சிலருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.

பொன்னுக்கு வீங்கி, கணையத்தை தாக்கி, அதீத வயிற்று வலியை ஏற்படுத்தும்.

பெண் குழந்தைகளுக்கு, சினைப்பையை தாக்கி அழற்சியை ஏற்படுத்துவதுடன், அடிவயிற்று பகுதியில் தீவிர வலியை ஏற்படுத்தும்.

ஆண்களின் விந்தணு உற்பத்தியில், விதைகளில் அழற்சியை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும்.

தண்டுவட நரம்பில் வைரஸ் தொற்று ஏற்பட்டால், மூளை வரை தொற்று பரவி மூர்ச்சை நிலை, கழுத்து பகுதி இறுக்கம், பிதற்றல் நிலை, தீவிரமான தலைவலியை உண்டாக்கும்.

இருமல், தும்மல், மூக்கொழுகுதல், சளி போன்றவை வாயிலாக மற்றவர்களுக்கு பரவக்கூடும்.

அதனால் பொது இடங்கள், பள்ளிகள் போன்றவற்றில், முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.