கால்களில் வீக்கமா? எப்படி தவிர்க்கலாம்?
ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இரவில் துாங்கினால் காலையில் இவ்வகையான வீக்கங்கள் குறைந்து விடும்.
சிலருக்கு கால்களில் அளவுக்கு அதிகமாக நீர் கோர்த்துக்கொள்வதாலேயே கால் வீக்கம் ஏற்படுகிறது. இப்படி ஏற்படுவதற்கு 'எடிமா' (edema) என்று பெயர்.
கால்களில் நிலையான வீக்கம் இருந்தால் ரத்தத்தில் உப்பு சத்து, சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறியவும். அவை இருந்தால் அதற்கான மருத்துவம் கட்டாயமாக பார்க்க வேண்டும்.
வீக்கம் குறைய ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சளுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து பேஸ்ட் செய்து, வீக்கமுள்ள இடத்தில் தடவி அவை காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உங்கள் பாதங்கள் வீங்கியிருந்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் ஐஸ் கட்டியால் மசாஜ் செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பை போட்டு அதில் உங்கள் கால்களை வைக்கவும். இது கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும்.
உணவில் முள்ளங்கி, வாழைத்தண்டு, சுரைக்காய், பூசணிக்காய் முதலிய நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.
கால் வீக்கத்துடன் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, இறுக்கமான உணர்வு , காய்ச்சல், கால்கள் வீங்கி சிவந்து காணப்படுதல் போன்றவை இருப்பின் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.