சிறுநீரக கற்கள் வராமல் தவிர்க்க இதோ டிப்ஸ்
சிறுநீர் வரும்போது உடனே கழிக்காமல் அடக்கி வைக்க கூடாது.
போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் உடலிலுள்ள கழிவுகள் சிறுநீரகத்தில் தேங்கி கற்களாக உருவாகிறது.
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இளநீர், அன்னாசி பழம், எலுமிச்சை சாறு, பழங்கள், நீர் சத்துகள் நிறைந்த காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, நுங்கு, கேரட், வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.
அதிகளவு உப்பு நிறைந்த உணவுகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
கால்சியம், ஆன்டாசிட் மருந்துகளை குறைத்து கொண்டால் கற்கள் தோன்றும் பிரச்னை இருக்காது. முன்னதாக டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.