நீளமான கேசம், பிரின்டட் சட்டை என ஸ்டைலிஷாக அசத்தும் சீயான் விக்ரம்
நடிகர் 'சீயான்' விக்ரம் விதவிதமான கெட்டப்புகளில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவரின் மகன் ஹீரோவாக நடிக்கத் துவங்கிய நிலையிலும், தானும் ஹீரோவாக நடித்து வியப்பில் ஆழ்த்துகிறார்.
இவரின் நடிப்பில் 'பொன்னியின் செல்வன் - 2' வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பட பிரமோஷன் நிகழ்ச்சிகள் பரபரப்பாக நடக்கின்றன.
இதில், நடிகர் விக்ரமின் ஹேர் ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொன்னியின் செல்வனுக்காக கேசத்தை நீளமாக வளர்த்த விக்ரம், தங்கலான் படத்துக்காகவும் நீளமாகவே தொடர்ந்துள்ளார்.
செல்லுமிடங்களுக்கு இதே நீளமான கேசத்துடன் ஸ்டைலிஷாக உலா வருகிறார். இளம் வயது நடிகர்களுக்கு ஃடப் கொடுக்கும் வகையில் விதவிதமான ஹேர் ஸ்டைலில் காட்சி தருகிறார்.
அதேவேளையில் இன்றைய டிரெண்டுக்கேற்ப பிரிண்டட் சட்டைகளுடன் ஸ்டைலிஷாகவும் போஸ் கொடுத்துள்ளார்.
இவரின் இந்த ஸ்டைலிஷான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், 'சீயானுக்கு வயது பின்னோக்கி செல்கிறதா?' என்ற மகிழ்ச்சியுடனேயே வைரலாக்கி வருகின்றனர்.