குழந்தைகளை பாதிக்கும் காலநிலை மாற்றம்
உலகில் கடலோர வெள்ளம், வறட்சி, அதீத வெப்பம், காட்டுத்தீ, வெப்ப அலை, துாசி புயல், ஆற்று வெள்ளம், வெப்பமண்டல புயல் ஆகிய எட்டும் காலநிலை மாற்றத்துக்கான காரணிகள்.
இந்த ஆபத்தான காரணிகளால் குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
இதில், குறைந்தது மூன்று ஆபத்துகளில் உலக குழந்தைகளில் 50 சதவீதம் பேர் (110 கோடி), குறைந்தது ஒரு ஆபத்தில் 230 கோடி குழந்தைகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
ஆபத்து காரணிகளில் அதிகபட்சமாக வறட்சி (180 கோடி பேர்) தான் முதலிடத்தில் உள்ளது.
இதனால், குழந்தைகளின் உடல்நிலை மற்றும் கல்வி பாதிக்கப்படலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, எதிர்கால ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.