கலர்புல் பீட்ரூட் மற்றும் தேங்காய் பர்பி ரெசிபி

தேவையானப் பொருட்கள்: பீட்ரூட் -1, சர்க்கரை - 1 கப், முந்திரி, ஏலக்காய் துாள் - தேவையானளவு.

தேங்காய் துருவல் - 0.5 மூடி, நெய் - தேவையானளவு.

பீட்ரூட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு கடாயில், பீட்ரூட் துருவல், தேங்காய் துருவலை போட்டு வதக்கவும்.

பச்சை வாசனை போனதும், சர்க்கரை சேர்த்து கிளறவும்.

சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்து, பீட்ரூட் கலவையில் சேர்க்கவும்.

கடாயில், ஒட்டாமல் இறுகி வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி, விருப்பமான அளவில் துண்டுகள் போட்டால், இப்போது பீட்ரூட் தேங்காய் பர்பி ரெடி.