இன்று இந்திய விவசாயிகள் தினம்!!
இந்தியாவில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிச., 23ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வது விவசாயத்தொழில். இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம்.
நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. விவசாய துறைக்கு பல சட்டங்கள், திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் முன்னாள் பிரதமர் சரண் சிங்.
இதை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்த தினமான டிச., 23 மத்திய அரசு சார்பில் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை' சட்டத்தைக் கொண்டு வந்தார்.
வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
விவசாய தொழில் இயற்கை சூழலோடு தொடர்புடையதால், இதில் பல்வேறு சவால்கள் உள்ளன.
மக்களின் பசியை போக்க உணவை படைத்து வரும் விவசாயிகள் போற்றத்தக்கவர்கள்.