குழந்தைகளுக்கு டிஜிட்டல் டயட் முறை அவசியம்
இன்றைய நாகரிக உலகில் குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் ஸ்மார்ட் போனில் பொழுது போக்குகின்றனர்.
இதனால், குழந்தைகளின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும் நிலையில், மொபைல் கேம், சீரியல் போன்றவற்றை பழக்கப்படுத்தி விட்டு திடீரென பறித்தால் அவர்களால் ஏற்க முடியாது.
மதுப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பவர்களின் கதை தான் இதுவும். எனவே, படிப்படியாக ஸ்மார்ட் போன் அடிக்ஷனை தவிர்க்க இதோ சில டிரிக்ஸ்...
தற்போது ஸ்மார்ட் போன்களை டிவி.,களில் கனெக்ட் செய்ய முடியும் என்பதால், முடிந்த வரை அவற்றை கையில் கொடுக்காமல், பெரிய திரையில் காணச் செய்யுங்கள்.
குழந்தைகளை வீடுகளுக்குள் அடைத்து வைக்காமல், சக குழந்தைகளுடன் ஓடி, ஆடி விளையாட வாய்ப்புகளை கட்டாயம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நெட் பேக் போடும் போது, ஒரு நாளுக்கு ஒரு ஜி.பி. அளவு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீடுகளிலுள்ள 'அன்லிமிடெட் ஒய்-பை' தேவையில்லை எனில் துண்டித்து விடுங்கள்.
ஸ்கிரீனில் என்ன பார்க்கின்றார்கள், அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
உணவில் எப்படிச் சர்க்கரையைக் குறைக்கிறோமோ, அதுபோல போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்க, 'டிஜிட்டல் டயட்' முறை அவசியம்.