கனவுத்தோட்டத்தில் இளஞ்சிவப்பு நிற நெல்லிக்காய் வளர்க்க இதோ டிப்ஸ்
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, இளஞ்சிவப்பு நிற நெல்லிக்காயை எளிதாக சாகுபடி செய்யலாம்.
ஒவ்வொரு நெல்லிக்காய் செடிக்கும் இடையே 15 அடி இடைவெளி இருந்தால் போதும்.
ஒவ்வொரு பள்ளமும், 2 அடி அகலம், 2 அடி உயரம் இருக்க வேண்டும்.
இந்த பள்ளத்தில், தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் கலவை உள்ளிட்டவை அடியுரமாக போட்டு நட வேண்டும்.
இதுபோல செய்தால், கோடை காலத்திலும் வறட்சியை தாங்கி நெல்லிக்காய் மகசூல் தரக்கூடும்.
குறிப்பாக, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், நெல்லிக்காய் சாகுபடியை பொறுத்தவரையில், நீர்ப்பாசனத்திற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது.
லேசான ஈரப்பதம் இருந்தால் போதுமானது; நல்ல மகசூல் கிடைக்கும்.
பச்சை நிற நெல்லிக்காய் போலவே, இளஞ்சிவப்பு நிற நெல்லிக்காயிலும் அதிக சத்துகள் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.