மகிழ்ச்சியாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய 5 டிப்ஸ்

மனநிறைவு, திருப்தி போன்ற உணர்வுகளால் வகைப்படுத்தப்படும் நேர்மறையான உணர்ச்சி நிலை தான் மகிழ்ச்சி. இது மனிதர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய அம்சம்.

ஒருவரின் தனிப்பட்ட சூழ்நிலைகள், மதிப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றால் மகிழ்ச்சியின் அளவுகோல் மாறுபடும். அந்த மகிழ்ச்சியை அடைவதற்கான எளிய 5 டிப்ஸ் இதோ...

நன்றியுணர்வு பழகுவோம்... வாழ்க்கையில் கிடைத்ததை எண்ணி நன்றியுணர்வோடு இருங்கள். தற்போது இருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கவும்.

விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள்... படிப்பது, சமைப்பது, ஓவியம் வரைவது, அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுவது என மகிழ்ச்சி தரும் செயல்களுக்கு நேரம் ஒதுக்கவும்.

மற்றவர்களுடன் இணைந்திருங்கள்... குடும்பத்தினர், அண்டை அயலாருடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் மகிழ்ச்சியின் முக்கிய அம்சம்.

நிகழ்காலத்தில் முழுமையாக இருங்கள்... எதிர்காலம், கடந்த காலம் பற்றி கவனச்சிதறல் இன்றி தற்போதைய தருணத்தில் கவனத்தை செலுத்துவது மகிழ்ச்சியைத் தரும்.

உடல்நலனில் கவனம்... மனம் மகிழ்ச்சியாக இருக்க, உடல் பிரச்னை செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு தினசரி உடற்பயிற்சி, போதிய தூக்கம் அவசியமானது.