மண் இல்லாமல் தண்ணீரில் வளரக்கூடிய 7 செடிகள்
பொத்தோஸ் (மணி பிளான்ட்)... தண்ணீரில் எளிதாக வளரக்கூடிய இந்த செடி பலராலும் அதிகளவில் விரும்பப்படுகிறது. இதய வடிவிலான இலைகள், குறைந்த பராமரிப்பு ஆகியவை வளர்ப்பை எளிதாக்குகின்றன.
ஆர்க்கிட்ஸ்... பலவகையான ரகங்கள், நிறங்களில் இவை கிடைக்கின்றன. தண்ணீரில் வேர்கள் அழுகுவதற்கான வாய்ப்பு குறைவு. வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீரை மாற்ற வேண்டும்.
அதிர்ஷ்ட மூங்கில்... ஒரு பவுலில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் கூழாங்கற்கள், அலங்கார கற்கள் என அலங்கரிக்கலாம். இதற்கு குறைந்தபட்ச கவனிப்பு மட்டுமே தேவைப்படுகிறது.
புதினா... மூலிகைச்செடிகளில் ஒன்றான புதினாவின் ஆரோக்கியமான தண்டுப்பகுதியை ஒரு டம்ளர் தண்ணீரில் வைத்தாலே ஒரு சில நாட்களில் வேர்ப்பிடித்து வளரக்கூடும்.
கோலியஸ்... இது வண்ணமயமான, பசுமையான தாவரமாகும்; தண்ணீரில் விரைவாக வேர்விடும். காலை சூரியன் மற்றும் பிற்பகல் நிழலுடன் செழித்து வளரக்கூடும்.
ஸ்பைடர் செடிகள் தண்ணீரில் மட்டுமே வளரக்கூடிய மற்றொரு எளிதான வீட்டு தாவரமாகும். இந்த தாவரங்கள் நீண்ட, அடுக்கு தண்டுகளில் தாவரங்களை உருவாக்குகின்றன.
ரோஸ்மேரி... தண்ணீரில் வளர்க்கப்படும் ரோஸ்மேரி செடிகளை தினமும் குறைந்தப்பட்சமாக 6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும்.