நம்பிக்கை தரும் ரத்தன் டாடாவின் வார்த்தைகள்!!

சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்து பின்னர் அவற்றைச் சரியாகச் செய்கிறேன்.

மற்றவர்கள் உங்களை நோக்கி எறியும் கற்களை எடுத்துக் கொண்டு ஒரு நினைவு சின்னத்தை கட்டியெழுப்புங்கள்.

வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடக்க வேண்டும். ஆனால் வெகுதூரம் நடக்க வேண்டும் என்றால் ஒன்றாக நடக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் மிக முக்கியம். ஈசிஜி-ல் கூட, கோடு நேராக சென்றால் நாம் உயிரிழந்துவிட்டதாக அர்த்தம்.

மற்றொருவரின் பாணியை பின்பற்றுபவர் சிறிது காலம் தான் வெற்றிபெற முடியும், அவரால் வெகுதூரம் செல்ல முடியாது.

மக்கள் உங்களை பின் தொடர வேண்டுமென்றால், நீங்கள் அவர்களை அன்போடு வழிநடத்த வேண்டும்.

ஆழ்ந்த சிந்தனையும், கடின உழைப்பும் இல்லாமல் பெரிய விஷயங்கள் எதையும் அடைய முடியாது.