தீபாவளிக்கு வெளியாகும் துருவ நட்சத்திரம்?
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் உருவான திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட இப்படம் சமீபத்தில் முதல் பாகமாக ‛துருவ நட்சத்திரம் - யுத்த காண்டம்' எனும் பெயரில் வெளியாகும் என தெரிவித்தனர்.
இதில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ் கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டப்பிங் பணியில் விக்ரம் ஈடுபட்டிருந்த போது இதனை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
வரும் தீபாவளிக்கு துருவ நட்சத்திரம் திரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.