யுனெஸ்கோ கலாசார பட்டியலில் தீபாவளி பண்டிகை
யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ என்பது ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு.
இவ்வமைப்பு பாரம்பரிய சின்னத்தின் சரித்திர காலம், கலைபடைப்புத் தன்மை உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில், சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப்
பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர
சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார்.
யுனெஸ்கோவின் இம்முடிவு இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்; இந்த புதிய மைல்கல்லும், அதன் பாதையை வலுப்படுத்துகிறது என கஜேந்திர சிங் கூறினார்.
தீபாவளி இந்தியாவின் காலத்தால் அழியாத பண்டிகைகளில் ஒன்றாகும். இது இப்போது உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவும் என கூறப்படுகிறது.
கும்பமேளா, துர்கா பூஜை, யோகா, ராம்லீலா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவைகள் ஏற்கெனவே யுனெஸ்கோவின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.