இளம்வயதில் மாதவிடாய் வருவதால் ரத்தசோகை ஏற்படுமா?

பொதுவாக பெண்பிள்ளைகள் 10 முதல் 16 வயதில் பூப்பெய்வது வழக்கமான நிகழ்வு தான் என டாக்டரகள் கூறுகின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், ரசாயனங்களால் ஏற்படும் ஹார்மோன் வேறுபாடு போன்றவற்றால் முன்பை விட தற்போது பெண்கள் பூப்பெய்தும் வயது குறைந்து கொண்டே வருகிறது.

பூப்பெய்திய முதல் இரண்டாண்டுகளுக்கு மாதவிடாய் ஒழுங்கில்லாமல் வரும்.

குறிப்பிட்ட வயதிற்கு மேல் சரியான சுழற்சியில் மாதவிடாய் வரும் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

12 வயதில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருக்க வேண்டும். உணவில் இரும்புச்சத்து குறைபாடுதான் ஹீமோகுளோபின் குறைவதற்கு காரணம்.

மாதவிடாய் ரத்தப்போக்கினால் ஹீமோகுளோபின் குறையும். இரும்புச்சத்துள்ள உணவு வகைகளுடன் பால், முட்டை, புரத உணவுகளும் கொடுப்பது நல்லது.

தவிர கொக்கிப்புழு தாக்கம், மலேரியா, மாதவிடாய் அதிகம் போவது போன்ற மற்ற காரணங்களும் உண்டு.

பச்சை காய்கறிகள், கீரை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், அசைவத்தில் ஈரல், சுவரொட்டி, முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் இரும்புச்சத்து மாத்திரைகள் டாக்டர் பரிந்துரையின் பேரில் சாப்பிடலாம்.