முதுமையில் கண் பாதிப்பு... அலட்சியம் வேண்டாம்!
முதியோர் மத்தியில் அதிகமாக காணப்படும் பிரச்னை கண் புரை; இதற்கு விரைவில் ஆப்ரேஷன் செய்வது நல்லது.
ஒரு சிலர் நீண்டகாலம் விடுவதால் அழுத்தம் அதிகரித்து சிக்கலை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் பார்வை போகும் அபாயமும் உண்டு.
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் அதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுடன், கட்டாயம் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் விழித்திரை பரிசோதனை செய்ய வேண்டும்.
நீரிழிவு காரணமாக டயபடிக் ரெட்டினோபதி பாதிப்பு ஏற்பட்டு, பார்வை பறிபோகும் வாய்ப்புண்டு. துவக்கத்தில் கண்டறிந்தால், முறையான சிகிச்சை பெற்று, பார்வையை தக்க வைக்கலாம்.
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, கண் நரம்பு துண்டிக்கப்படும் வாய்ப்புண்டு. குளூக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) என்பது அமைதியாக பார்வையை பறிக்கும் நோய்.
எந்த அறிகுறியும் இருக்காது; ஏதா பிரச்னை என பரிசோதிக்கும் போது, 50 சதவீத பார்வை பறிபோய் இருக்கும்.
கண்களில் கண்ணீர் சுரப்பு நன்றாக இருப்பினும், கண்ணீரின் தரம் குறைவதால், கண் எரிச்சல், மணல் போட்டது போல் உறுத்துவது போன்ற பிரச்னை ஏற்படும். இதனை டிரை-ஐ என்பர்.
கண் நரம்புகள், கருவிழி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ சத்து அவசியம். முதிய வயதில் இச்சத்துக்கள் குறையும். எனவே சத்தான உணவு எடுக்க வேண்டும்.
கேரட், பப்பாளி, பச்சை காய்கறி, கீரைகள், மீன் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.