எரிபஸ்... தங்கத்தை வெளியிடும் எரிமலை இது!
அண்டார்டிகாவின் 'எரிபஸ்' எரிமலை தினமும் 80 கிராம் தங்க நுண்துகள்களை (ஆண்டுக்கு ரூ. 19 கோடி மதிப்பு) வெளியிடுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தென் துருவத்திலிருந்து 1,350 கி.மீ., தொலைவில் ரோஸ் கடலில் இந்த எரிமலை அமைந்துள்ளது.
உயரம், கடல் நீர்மட்டத்திலிருந்து 12,441 அடி.
எரிமலை லாவா குழம்பில் இருந்து வெளியேறும் வெப்பமான வாயுக்களுடன் சேர்ந்து, இந்த தங்க நுண் துகள்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.
இது 1000 கி.மீ., துாரம் காற்றில் பயணித்து பனிப்படலத்தில் படிகிறது.
எனவே, இதை சேகரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபஸ் மலை, தங்க நுண் துகள்களை எப்படி உருவாக்கி வெளியிடுகிறது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், இது எரிமலையின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக நீடிக்கிறது.