இன்று உலக பிஸ்தா தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்.,26ல் உலக பிஸ்தா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பிஸ்தாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.அதன் பயன்கள் சில ...
பிஸ்தாவில், 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதில் சியாசாந்தின், லூட்டின் என்ற 2 கரோட்டினாய்டுகள் உள்ளன. இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரை பாதிக்காமல் பாதுகாத்து தெளிவான பார்வைக்கு உதவுகின்றன.
இதை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச்செய்யும்.
பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 உள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும்.
தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் எந்த வகையான புற்று நோயும் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.
ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.