ரத்த சோகை உள்ளவர்கள் உண்ண வேண்டியவை இவை

சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால், ரத்த சோகை, அனைத்து வயதினரிடமும் பரவலாக உள்ளது.

அதிகப்படியான உடல் மற்றும் மன சோர்வு, மூச்சிரைத்தல், முடி கொட்டுதல், பசியின்மை உட்பட பல அறிகுறிகள் ரத்த சோகைக்கு உண்டு.

தினசரி உணவில் சர்க்கரை, கொழுப்பு உள்ளவற்றை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, அன்றாடம் தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துகள் உணவில் இல்லாமல் போய் விடுகின்றன.

எனவே, ரத்த சோகை உள்ளவர்கள், கம்பு, ராகி, முழு தானியங்கள், பட்டாணி, தண்டுக்கீரையை உணவில் சேர்க்க வேண்டும்.

அவ்வப்போது உலர்ந்த திராட்சையை உட்கொள்ளலாம்.

அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சி, ஈரல், மண்ணீரல் போன்றவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

இரும்புச் சத்து உணவுகளோடு, வைட்டமின் 'சி' உள்ள நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடும்போது, இரும்புச் சத்து முழுமையாக கிரகிக்க உதவும்.

காபி, டீ போன்ற பானங்கள், கால்சியம் மாத்திரைகளோடு சேர்த்து, இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடும் போது, டானிக் குடிப்பது கூடாது; இவை, இரும்புச் சத்து கிரகிப்பை தடுத்து விடும்.