வளர்ந்து வரும் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்துக்கு...!

விளையாடி வளர வேண்டிய வயதில் ஒரே இடத்தில் உட்கார வழிவகுப்பதால், முடிந்தளவு ஸ்மார்ட் போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

எனவே, முதலில் குழந்தைகளை வெயிலில் ஓடி, விளையாட அனுமதிக்க வேண்டும்.

அதிகம் வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி சத்து இயல்பாக கிடைத்து தசை, எலும்பு வலிமையாக இருக்கும்.

வீட்டுக்குள் அடைபட்டு இருக்கும் குழந்தைகளுக்கு வயதாகும் போது பல்வேறு எலும்பு சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.

தவிர, சத்தான காய்கறி, பழங்கள் உட்கொள்ள வேண்டும்.

சிறுவயதிலிருந்தே பால், முட்டை, கீரை போன்றவற்றை அடிக்கடி தரும்போது, குழந்தைகளின் எலும்புகள் ஆரோக்கியமான வளர்ச்சியில் இருக்கக்கூடும்.

யோகா முறையை சிறு வயது முதல் அனைவரும் செய்தால், மூட்டுகளுக்கு நல்ல வளையும் தன்மை கிடைக்கும்.