நார்மல் டெலிவரி ஆவதற்கு சாதகமான நான்கு விஷயங்கள்...

கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் விருப்பம், 'நார்மல் டெலிவரி'யில் குழந்தை பெற வேண்டும் என்பது தான்.

37 வாரங்களுக்கு பின், எப்போது வேண்டுமானாலும் பிரசவ வலி வரலாம்.

இயல்பாக வலி வந்தாலும், மருந்துகள் வாயிலாக வலியை வரவழைத்தாலும், நார்மல் டெலிவரி ஆவதற்கு நான்கு விஷயங்கள் சாதகமாக அமைய வேண்டும்.

இடுப்பெலும்பு சுருங்கி விரிவது

குழந்தையின் தலை கீழ்நோக்கி வருவது

கர்ப்பப்பை வாய் 10 செ.மீ., வரை திறப்பது.

குழந்தையின் தலை 9.5 செ.மீ., இருக்கும். கர்ப்பப்பை வாய் 10 செ.மீ., திறந்தால் தான், தலை எளிதாக வெளியில் வர முடியும்.