ஆரோக்கியம் தரும் வெல்ல ரவா லட்டு

தேவையானப் பொருட்கள்: பாம்பே ரவை - 1 கப், துருவிய வெல்லம் - 0.75 கப், தேங்காய் துருவல் - 0.50 கப், காய்ச்சி ஆறிய பால் - 3 டீஸ்பூன்.

நெய் - 3 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவையான அளவு, ஏலக்காய் துாள் - 0.50 டீஸ்பூன்.

அடுப்பில் கடாயை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானவுடன், முந்திரி, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியே வைக்கவும்.

அதே கடாயில் ரவையை போட்டு, மிதமான தீயில் வறுக்கவும். நறுமணம் வந்தவுடன், தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.

பின் அதே வாணலியில், துருவிய வெல்லத்தை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பை மிதமான தணலில் வைக்கவும். வெல்லம் கரைந்தவுடன் ரவையை சேர்க்கவும்.

ஏலக்காய் துாள், வறுத்த திராட்சை, முந்திரியை சேர்த்து நன்றாக கலந்து, கலவையை லட்டு பிடிக்கவும். கலவை உலர்ந்தால் பாலை, சிறிது, சிறிதாக சேர்த்து லட்டு பிடிக்கவும்.

பாலுக்கு பதிலாக நெய்யும் பயன்படுத்தலாம்; நெய் சேர்த்தால் அதிக நாட்கள் லட்டு கெடாமல் இருக்கும்.

வெல்லத்தால் தயாரித்த லட்டு, சர்க்கரை லட்டை விட சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் உகந்தது.