ஹெல்த்தியான பாலக்கீரை சட்னி !

தேவையானப் பொருட்கள்: பாலக்கீரை - 1 கட்டு, மாங்காய் - 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1.

காய்ந்த மிளகாய் - 4, பூண்டு, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சுத்தம் செய்த பாலக் கீரையை போட்டு நன்கு வதக்கவும்.

பின், நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய தக்காளி, தோல் சீவி வெட்டிய மாங்காய், பூண்டு சேர்த்து வதக்கி, பின் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

இந்த கலவையில் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்தால், இப்போது ஆரோக்கியமான மற்றும் சுவையான, 'பாலக் கீரை சட்னி' இப்போது ரெடி.

விருப்பப்பட்டால், கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

இட்லி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவை அள்ளும்.