வெந்தயப் பொங்கல் ரெசிபி இதோ

தேவையானப் பொருட்கள்: பச்சரிசி - 2 கப், வெந்தயம் - 2 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 கப்

மிளகு, சீரகப்பொடி, நெய் - சிறிதளவு, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

பச்சரிசி, வெந்தயத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

அதில், தேங்காய் பால், உப்பு, நெய், மிளகு, சீரக பொடி ஆகியவற்றை கலக்கவும்.

இப்போது, சுவையான 'வெந்தயப் பொங்கல்' ரெடி.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த வெந்தயப் பொங்கலை அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.