குட்டீஸ்களுக்கு ஹெல்த்தியான ராகி லட்டு... ரெசிபி இதோ !
ஒரு கப் ராகி மாவு, சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்தவுடன், ஊத்தப்பம் போன்று ராகி மாவை ஊற்றி சுட்டு எடுத்து, ஆற வைக்கவும்.
அரை கப் வேர்க்கடலையை கடாயில் நன்றாக வறுத்து ஆற விடவும்.
பின்னர், 1.5 கப் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ராகி தோசை மற்றும் வேர்க்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
பின்னர் ஒரு தட்டில் இதை கொட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால், இப்போது, சுவையான, சத்தான ராகி லட்டு ரெடி.
விருப்பப்பட்டால் முந்திரி, பாதாம் பருப்புகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
ராகியில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து உட்பட ஏராளமான சத்துகள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.