எலிக்காய்ச்சல் எதனால் பரவுகிறது... அறிகுறிகள் என்ன?

எலிகள் நீரில் சிறுநீர் கழிப்பதன் மூலம் எலிக்காய்ச்சல் பரவுகிறது. எலிகளின் கடி அல்லது கீறல் மூலமாகவும் பரவலாம்.

அவற்றின் சிறுநீர் கலந்த தண்ணீரில் நடக்கும்போது கால்கள் வழியாக பாக்டீரியா உடலுக்குள் நுழையும்.

மஞ்சள் காமாலை, காய்ச்சல், வயிற்றுவலி, வயிறு வீக்கம், பாதிக்கப்பட்டவரின் சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை அறிகுறிகள்.

எனவே சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டும். குடிநீர் குழாய்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வீடு மற்றும் சுற்றுப்புறத்தை எலிகளின் தொல்லை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

உணவு பொருட்களை சரியாக மூடி வைக்க வேண்டும்.

காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுகவேண்டும்.

எலிக்காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவாது.