ஆண்களின் ஷர்ட் தேர்வில் இருக்கு சீக்ரெட்!
பேஷன் உலகில் எத்தனையோ புது வரவுகள் வந்தாலும், ஆண்களின் வார்ட்ரோபில் 'எவர் கிரீன்' இடத்தைப் பிடித்திருப்பது 'செக் ஷர்ட்' தான்.
ஆனால், கண்ணில் பட்ட கட்டம் போட்ட சட்டையை எடுத்து அணியாமல், ''நம்ம உடல்வாகுக்கு ஏற்ற செக் ஷர்ட்டைத் தேர்ந்தெடுப்பதில்தான், 'அல்டிமேட் லுக்கே' இருக்கிறது
நீங்கள் பார்ப்பதற்கு சற்று ஒல்லியாக இருப்பவர் என்றால், பெரிய கட்டங்கள் கொண்ட சட்டைகளே உங்களுக்குச் சரியான தேர்வு.
குறிப்பாக 'விண்டோ பேன்' , 'டார்டன் செக்' மற்றும் 'பபலோ செக்ஸ்' வகைகளை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
உங்களின் உடற்கட்டை இன்னும் அழகாக 'ஹைலைட்' செய்து காட்ட, 'டட்டெர்செல்', 'பிரின்ஸ் ஆப் வேல்ஸ்'மற்றும் 'மைக்ரோ செக்ஸ்'வகைகளை தேர்ந்தெடுக்கலாம்.
பருமனான அல்லது அகலமான உடல்வாகு கொண்டவர்கள், மிகச் சிறிய மற்றும் மெல்லிய கட்டங்கள் கொண்ட சட்டைகளை அணிவது புத்திசாலித்தனம்.
'கிராப் செக்ஸ்', 'மினி கிங்கம்' மற்றும் 'சப்ட்டில் பிளைட்' வகை சட்டைகள், உங்களை சற்று ஒல்லியாகவும், கச்சிதமாகவும் காட்டும்.
அடுத்த முறை ஷாப்பிங் செல்லும்போது, சும்மா ஏதோ ஒரு செக் ஷர்ட்டை எடுக்காமல், உங்களுக்கான பேட்டர்னைத் தேடி எடுத்தால், நீங்கள்தான் 'மாஸ்!'