காசநோய் பாதிப்பின் போது உடலை பராமரிப்பது எப்படி?
காச நோய் இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சையுடன் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் குணப்படுத்தலாம்.
பாதிப்புபை அறிந்தவுடன் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். உடல் நிலை தேறினாலும் குறிப்பிட்ட கால அளவு வரை மருந்தை நிறுத்தக்கூடாது.
மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். புகைபிடிப்பது, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
உடல் திசுக்களை சரிசெய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பால், முட்டை, பருப்பு வகை, பயறு உள்ளிட்ட புரத உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அதிக காரமான, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்த வேண்டும். பிறருடன் பேசும்போது முகக் கவசம் அணிவது நல்லது.
நுரையீரலை வலுப்படுத்த டாக்டர் ஆலோசனையுடன் மூச்சுப் பயிற்சிகளை செய்யலாம்.