கோடையில் பாலைப் பாதுகாப்பது எப்படி?

கோடைக்காலத்தில் பால் சீக்கிரம் கெட்டு போய்விடும் அதனால் காலை, மாலை இரு வேளைகளிலும், பால் வாங்குவது நல்லது

பழைய பால், புதிய பால் இரண்டையும் கலக்காமல் இருப்பது நல்லது. உடனே பயன்படுத்துவது என்றால் கலக்கலாம்.

பால் வைக்கப்படும் பாத்திரம் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். சிறிது திட்டுகள் இருந்தாலும் பால் கெட்டுவிடும்.

பால் பாத்திரத்தைக் கழுவிவிட்டுத் துணியால் துடைக்ககூடாது. காரணம் துணி சுத்தமாக இல்லாவிட்டால் பாத்திரத்துக்குள் கிருமிகள் உற்பத்தியாகி கெடலாம்.

பால் வைத்திருக்கும் பாத்திரத்தை எப்போதும் மூடியே வைக்க வேண்டும்.

பாலை வாங்கியவுடன் காய்ச்சி விடுவது நல்லது. உபயோகிக்க எடுக்கும்போது மறுபடியும் காய்ச்சி உபயோகிப்பதும் நல்லது.

எப்போதும் பால் சூடாக இருந்தால் கெடாது. அதனால் ஃபிளாஸ்க்கிலும் வைக்கலாம்.

பிரிட்ஜில் பால் வைத்தால் கெடாமல் இருக்கும். இருந்தாலும் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குமேல் வைக்கப்பட்ட பாலைப் பயன்படுத்தக் கூடாது. பீரசரில் பால் பாகெட்டை வைத்தும் பயன்படுத்து இன்னும் சிறந்தது.

பால் திரிந்து விட்டால் அதில் எலுமிச்சை பிழிந்து காய்ச்சி, பன்னீராக மாற்றி பயன்படுத்தலாம். மேலும் தேவைக்கு ஏற்ப சர்க்கரை கலந்து, ஒரு சுவையான இனிப்பாக மாற்றலாம்.