மஞ்சளாகும் பற்கள்.. தீர்வு என்ன?
பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு எனாமல் சரியாக உருவாகாமல் மெலிதாக இருப்பதே காரணம்.
இது பாக்டீரியாவால் ஏற்படும் பற்சிப்பி நோயின் அறிகுறி.
இது ஈறு திசுக்களை சிவப்பாக மாற்றி, வாய் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
ஆரம்பத்தில் இதை சரிசெய்யாவிட்டால் தசைநார்கள் சேதமடைந்து பல் இழப்பு ஏற்படும்.
இப்பிரச்னை உடையவர்கள் உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.
கால்சியம், வைட்டமின் டி.ஏ.சி., பற்றாக்குறையாலும் இந்த பிரச்னை ஏற்படும்.
வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொண்டு, தினமும் இருமுறை பல் துலக்கி, சுகாதாரத்தை பின்பற்றினால் இதை சரிசெய்துவிடலாம்.