தலைவலிக்கும், மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் தொடர்பு உண்டா?
அடிக்கடி ஏற்படும் தலைவலியை அலட்சியம் செய்யக்கூடாது.
மூளைகட்டி இருப்பின் ஆரம்பநிலையில், தலைவலி தொடர்ந்து இருக்கும்.
அனைத்து தலைவலியும் கட்டி இருப்பதால்தான் எனக் கூற முடியாது.
தலைவலி, அதிக வாந்தி, பார்வை குறைவது, காது சரியாக கேட்காமல் போவது, ஒரு பக்க கை, கால்கள் வராமல் போவது இதன் அறிகுறிகள்.
மூளையில் உருவாகும் அனைத்து கட்டிகளும் மரணத்தை ஏற்படுத்தாது. பல காரணங்களால் சில புற்றுநோய் கட்டிகளாக இருக்கக்கூடும்.
எனவே, அறிகுறிகள் இருந்தாலே சி.டி. ஸ்கேன் எடுத்து பரிசோதித்துக் கொள்வதும், உடனடியாக சிகிச்சை துவக்குவதும் அவசியம்.