நீரிழிவு பாதிப்பு குணமாகியும் மீண்டும் வர வாய்ப்புள்ளதா?

நீரிழிவு பாதிப்பு வந்து, குணமான பின்பு மீண்டும் வராது என்பதை நிச்சயமாக கூற முடியாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள், உடற்பயிற்சிகளை வைத்து தான் உள்ளது.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் நீரிழிவு உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.

துவக்க நிலையிலேயே வந்து நாம் குணமடைந்து விட்டோமே என்று அலட்சியப்படுத்த கூடாது.

6 மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் கண்டறிய பட்டு 5 முதல் 10 ஆண்டுகள் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் செய்து கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்.

இதில் அலட்சியம் காட்டினால் 10 ஆண்டுகளுக்கு பிறகு, பின் விளைவுகள் உடலை பாதிக்கக்கூடிய அளவில் பெரியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.