காற்று மாசு அளவு குறித்து அறிவோமா... பாதிப்புகள் என்னென்ன?
காற்றின் தர அளவுகோல் மற்றும் பாதிப்புகள் குறித்து அறிவோமா... 50க்கும் கீழாக இருந்தால் மட்டுமே சுவாசிக்க உகந்த காற்று. இதனால் ஆரோக்கியத்தில் பாதிப்பு இல்லை.
51 - 100 அளவு திருப்திகரம்; இதனால் லேசான சுவாசக் கோளாறு ஏற்படலாம்.
101 - 200 அளவு - மிதமானது, மோசம். இதனால் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.
201 - 300 அளவு ஆரோக்கியமற்றது. இந்த அளவில் நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
300 மேல் அளவு மிகவும் ஆரோக்கியமற்றது ஆகும். இந்த சமயத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மிக ஆபத்தான காற்று மாசு என்பதை 'பி.எம்., 2.5' என, உலக சுகாதார அமைப்பு அழைக்கிறது.
பி.எம்., 2.5 என்பது அளவு தலைமுடியின் சராசரி தடிமனை விட, 40 மடங்கு சிறியது. சுவாசிக்கும் போது, மூக்கின் செயல்பாட்டால் மற்ற மாசு துகள்கள் உட்செல்வது தடுக்கப்படும்.
ஆனால், பி.எம்., 2.5 நுண்ணிய துகள்கள், நேராக நம் நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் கலக்க கூடும்.
இதனால், சுவாச பிரச்னை, இதய கோளாறு, பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.