ஆதிபுருஷ் ஹீரோயின் கிருதி சனோனின் நவீன சீதாதேவி லுக்ஸ்.

'ஆதிபுருஷ்' படம் ஜூன் 16ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

கிருதி சனோன் அணிந்திருந்த ஐவரி புடவை ஸ்டைல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பாரம்பரியம் மாறாமல் இவர் புடவை உடுத்திய ஸ்டைல் நவீன சீதாதேவி போன்ற பிரமிப்பை உண்டாக்கியது.

பிரபல பேஷன் டிசைனர்கள் அபு ஜானி, சந்தீப் கோஸ்லா வடிவமைத்த இந்த புடவை, பாரம்பரியம் மாறாத புதுமையுடன் கலந்திருந்தது.

புடவையின் பார்டரில் சிவப்பு நிறத்துடன் தம்பா, டிக்கி பூக்கள் மற்றும் மரகதங்களுடன் கூடிய நளினமான வேலைப்பாடு இருந்தது.

பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் தங்க வளையல்கள், படிய வாரிய தலையில் கொண்டை என மினிமல் மேக்கப்பில் அசத்தினார் கிருதி சனோன்.